• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

9ஆவது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி!

ByA.Tamilselvan

Sep 17, 2022

ஒருநாள் ஒய்வுக்கு பிறகு 9 வது நாள் பயணத்தை ராகுல்காந்தி தொடங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள ‘பாரத் ஜோடோ யாத்திரை’ தமிழகத்தில் தொடங்கி இப்போது கேரளா வழியாக பயணிக்கிறது.காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்றுமுன்தினம் ஒருநாள் நடைபயணம் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் ‘பாரத் ஜோடோ யாத்திரையை’ எட்டாவது நாளான நேற்று கேரள மாநிலம் கொல்லத்தில் மீண்டும் தொடங்கினார்.
கடந்த ஒரு வாரத்தில் 150 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்ட பிறகு இன்று 9ஆவது நாளாக ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன், கொல்லம் மாவட்டத்தில் உள்ள புதியகாவு பகுதியில் மீண்டும் ‘பாரத் ஜோடோ யாத்திரை’யைத் தொடங்கினார்.