

ராகுல்காந்தி கேரளாவில் சுற்றுபயனத்தை முடித்துகொண்டு கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் வழியில் மீண்டும் தமிழகம் வருகிறார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3500 கி.மீட்டர் ஒற்றுமைக்கான நடைபயணம் மேற்கொள்கிறார். தனது நடை பயணத்தை கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். .கன்னியாகுமரியில் இருந்து, நேராக கேரளாவுக்கு சென்றார். அங்கு 11-ந் தேதி முதல் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கேரளாவில் பாத யாத்திரையை முடித்து கொள்ளும் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகிறார். வருகிற 29-ந் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூரில் அவர் நடைபயணம் மேற்கொள்கிறார். அப்போது பொதுமக்களையும் சந்தித்து பேசுகிறார். பின்னர் அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார். அன்று இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார். கூடலூரில் நடைபயணத்தை முடித்து கொண்டு அடுத்த நாள் கூடலூரில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூருக்கு செல்கிறார்.
