• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிறுமிகள் பாடிய பாடலை சமூக வலைதளத்தில் பகிர்ந்த ரஹ்மான்

முன்னணிஇசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரகுமான், அவரது சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில சுவாரசியமான தகவல்கள், செய்திகளைப் பகிர்வார்.சற்று முன் இரண்டு சிறுமிகள் பாடிய ஒரு தமிழ்ப் பாடலின் வீடியோவைப் பகிர்ந்து, “இந்த இரண்டு சகோதரிகள் சில சீரியசான கேள்விகளை இந்தப் பாடல் மூலம் கேட்கிறார்கள்” என்றும், “தண்ணீர், உணவு, மனித நேயம், அன்பு, இரக்கம்” ஆகிய ஹேஷ்டேக்குகளுடனும் குறிப்பிட்டுள்ளார் ரகுமான்.
அந்த சிறுமிகள் பாடிய பாடல் இயக்குனர் பாலா தயாரிப்பில், அருணகிரி இசையமைப்பில், அதர்வா ஆனந்தி, லால் நடித்து 2015ல் வெளிவந்த ‘சண்டி வீரன்’ படத்தில் இடம் பெற்ற ‘தாய்ப்பாலும் தண்ணீரும்…’ என்ற கிராமியப் பாடல். இந்த சிறுமிகளின் பாடலைப் பகிர்ந்து ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டிருப்பதால் அந்த வீடியோவை தற்போது பலரும் பார்த்து பாராட்டி வருகிறார்கள்.