மதுரை பத்திரிகையாளர்களின் வாழ்வாதார கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றித் தர வேண்டும் என்று எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை சூர்யாநகரில் 2019-ம் ஆண்டு 86 பத்திரிகையாளரர்களுக்கு சட்டவிதிகளுக்கு உட்பட்டு அப்போதைய நிலவழிகாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதைடுத்து வீட்டு மனைகளுக்கு பணம் செலுத்திய பத்திரிகையாளர்களுக்கு விதிகளுக்கு உட்பட்டு பட்டா வழங்கப்பட்ன. ஆனால், அவர்களுக்கு இதுவரை இணைய வழி பட்டா வழங்கப்படாததால் வீடு கட்ட முடியாமல் கடந்த நான்கு ஆண்டுகளாக தவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கும் திட்டத்தின் கீழ் மதுரை பத்திரிகையாளர்களின் கோரிக்கையினை பரிசீலித்து, சட்டவிதிகளுக்குட்பட்டு, 2019-ம் ஆண்டு மதுரை சூர்யா நகரில் 86 பத்திரிக்கையாளர்களுக்கு அப்போதைய நில வழிகாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதன்படி பணம் செலுத்தியவர்களுக்கு விதிகளுக்குட்பட்டு பட்டா வழங்கப்பட்டன. ஆனால் விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பத்திரிகையாளர்கள் அவர்களுக்குரிய வீட்டுமனைகளில் கடந்த 4 ஆண்டுகளாக வீடு கட்ட முடியாமல் தவிப்பதாகவும், இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்று செய்திகள் தெரிய வருகின்றன. மூச்சுக்கு மூச்சு பத்திரிக்கையாளர்களுக்கான அரசு என்று தம்பட்டம் அடிக்கும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின், மதுரை பத்திரிகையாளர்களின் வாழ்வாதார கோரிக்கையினை உடனடியாக தீர்த்துவைக்க வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)