• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆர்.பி.உதயக்குமார் பொதுமக்களுக்கு அன்னதானம்..,

ByP.Thangapandi

Jun 16, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பன்னியான் கிராமத்தில் அதிமுக முன்னாள் முதல்வரும் பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி 71 வது பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 நாட்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயக்குமார் பங்கேற்று பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதற்கு முன்னதாக பன்னியான் கிராமதிற்கு அருகில் உள்ள கணவாய் கருப்பசாமி கோவிலில் சாமி தரிசம் செய்தனர்.

இதில் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ வுமான ஐ. மகேந்திரன், மாநில அம்மா பேரவை துணைச்செயலாளர் துரை தனராஜ்,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரகு மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.