மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் அறுபதாம் வயதை முன்னிட்டு மணிவிழா மாநாடு நேற்று துவங்கி பத்தாம் தேதி வரை நடைபெறுகிறது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக இன்று மாற்றுத்திறனாளிகள் 150 பேருக்கு செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மணிவிழா சிறப்பு மலர் வெளியிடும் நிகழ்ச்சி இன்று தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. ஆதீன குருமகா சன்னிதானம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்று குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு செயற்கை கால் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக தர்மபுரம் ஆதீனம் சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நினைவு பரிசும், மாலை சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழாவில் குன்றக்குடி ஆதீன பொன்னம்பல அடிகளார், திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் சபாபதி தம்பிரான் சுவாமிகள், மேகாலயா முன்னாள் நீதி அரசர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து மணிவிழா நூலை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டார்.













; ?>)
; ?>)
; ?>)