• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தரமான படம் – ‘செல்ஃபி’! ரசிகர்களின் ரெஸ்பான்ஸ்!

ஜிவி பிரகாஷ் பிரகாஷ் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள செல்ஃபி திரைப்படம் குறித்து பொது மக்களின் ரெஸ்பான்ஸ் குறித்து ஒரு பார்வை!

செல்ஃபி படத்தில் ஜி.வி.பிரகாஷ் அவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ மேனன், வித்யா பிரதீப், வேங்கை சந்திரசேகர், சங்கிலி முருகன் உள்பட பலர் நடித்துள்ளனர். வெற்றிமாறன் உதவியாளர் மதிமாறன் இயக்கி உள்ள, இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தமிழகத்தில் வெளியிடுகிறார்.

செல்ஃபி திரைப்படம் கல்வி மாஃபியா கதையாக உள்ளது. கல்லூரியில் சீட்டிற்காக நடத்தப்படும் பேரம், அரசியல்வாதிகளின் தலையீடு என படம் முழுக்க நல்ல மெசேஜ் உள்ளது. கல்லூரியில் நடிக்கும் மோசடிகள், மாணவர்களின் தற்கொலைகள், கொலைகள் மற்றும் அநியாயமான கல்லூரி கட்டணம் ஆகியவற்றை அம்பலப்படுத்தி உள்ளது செல்ஃபி.

ஜிவி பிரகாஷ் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், கௌதம் மேனின் நடிப்பும் தரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறனின் இயக்கம் அருமை! மதிமாறன். வெற்றிமாறனின் உதவியாளர் என்பதை நிரூபித்து உள்ளார் என்று ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

மருத்துவக்கல்லூரி மாணவர்கள், இன்ஜினியரின் கல்லூரி மாணவர்கள் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்க வேண்டிய படம். ஆரம்பம் முதல் இறுதிவரை எந்த இடத்திலும் லேக் இல்லாமல் படம் விறுவிறுப்பாக உள்ளது. கெளதம் மேனன் இயக்குநராக மட்டும் இல்லை வில்லனாகவும் மிரட்டி உள்ளார். ஜிவி பிரகாஷின் இசையிலும் அதிரிபுதிரி செய்துள்ளதாக பொது மக்கள் படத்தை பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கொடுத்துள்ளனர்!