• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சென்னையில் நடைபெற்ற பிரேவ் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்க்கான தகுதி சுற்று போட்டி!

சென்னையில் முதல் முறையாக இன்டர்நேஷனல் பிரேவ் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் சார்பாக நடக்கவுள்ள இந்தியா மற்றும் இலங்கை மோதும் சர்வதேச தொழில் முறை குத்துச்சண்டை போட்டிக்கான தமிழ் நாடு பாக்ஸர்களை தேர்தேடுக்கும் தகுதி சுற்று போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியை சேர்ந்த குத்துச்சண்டை வீரர்கள் கலந்து கொண்டு மோதி தங்கள் வீரத்தை வெளிப்படுத்தினர். மேலும் மூத்த குத்துச்சண்டை வீரர், சார்ப்பட்டா பரம்பரை புகழ், பீடி தாத்தா பயிற்சியாளர் கஜபதியின் மாணவர்கள் முகமது தாகீர் கான் மற்றும் பிரசன்ன வெங்கடேசன் ஆகிய குத்துச்சண்டை வீரர்கள் இலங்கையிடன் மோதும் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

சிங்களனை எதிர்த்து ஐபிபிசி சாம்பியன்ஷிப் போட்டியில் மோத இருப்பவரும் மற்றும் வேர்ல்ட் சாம்பியனும் உலகின் அதிவேக குத்துவிட்டு புருஸ்லீயின் சாதனையை முறியடித்தவருமான பாலிசதிஷ்வர் போட்டிக்கு முன்னிலை வகித்தார். மற்றும் ஐபிபிசி நிர்வாக இயக்குநர் ராஜேஷ் போட்டி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். இந்திய தொழில் முறை குத்துச்சண்டை போட்டிகளின் கூட்டமைப்பு இந்த போட்டியை அங்கிகரித்துள்ளது.

இந்த போட்டி, சென்னை மதுரவாயலில் உள்ள எவர்லாஸ்ட் பிரேவ் இண்டர்நேஷனல் உள்அரங்கில் நடைபெற்றது. இந்தியா, இலங்கை மோதும் சர்வதேச தொழில் முறை குத்துச்சண்டை போட்டி வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதி சனிக்கிழமை மாலை அன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.