வேளச்சேரி போக்குவரத்து காவல்துறையில் 1600 ஆட்டோக்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட உள்ளது.
சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் சென்னை முழுவதும் ஓடும் ஆட்டோக்களில் பயணிகள் பாதுகாப்பு கருதி கியூ ஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டப்படும் பணி துவங்கியது.அதன் ஒரு பகுதியாக வேளச்சேரி போக்குவரத்து காவல்துறை அவர்கள் எல்லைக்குட்பட்ட 1600 ஆட்டோக்களில் கியூ ஆர் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை துவக்கியுள்ளனர். இன்று 150 ஆட்டோக்களுக்கு கியூ ஆர் கோடு ஒட்டப்பட்டுள்ளது.ஆட்டோ ஓட்டுநர் இருக்கையின் பின் புறம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது, பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் பயணிகளுக்கு தெரியும் வகையில் உள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள கியூ ஆட் கோடை பயணிகள் செல்போனின் கேமராவில் ஸ்கேன் செய்தால் ஆட்டோ ஓட்டுநர் விவரம், செல்போன் எண், முகவரி லொகேஷனுடன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுவிடும் எந்த வித பாதுகாப்பு உதவி, தேவையென்றாலும் காவல்துறை சில மணி துளிகளில் பயணிகளை அடைந்து அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்க இது உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் ஆட்டோ ஒட்டுநர்களுக்கு கியூ ஆர் கோடின் செயல்பாடு குறித்தும், அதன் நோக்கம் குறித்தும் போக்குவரத்து போலீசார் எடுத்துரைத்தனர்.விரைவில் அனைத்து ஆட்டோக்களுக்கும் கொண்டுவரப்படும் என தெரிவித்தனர்.