• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கோயிலுக்கு செல்லும் வழியில் மலைப்பாம்பு

BySeenu

Jan 7, 2025

கோயிலுக்கு செல்லும் வழியில் ஊர்ந்து வந்து 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்து வனப் பகுதிக்குள் விட்ட வனத் துறையினர் !!!

கோவை, பேரூர் தீத்திபாளையம் அடுத்த கரடிமடை ஐயா சாமி கோவில் அருகே உள்ள வனப் பகுதியில் இருந்து 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு கோயிலுக்கு செல்லும் பாதை வழியாக ஊர்ந்து வந்து உள்ளது. அதனைப் பார்த்த விவசாயிகள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் உடனடியாக மதுக்கரை வனச்சரக அலுவலருக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து மீண்டும் அடர்ந்த வனப் பகுதியில் விட்டனர்.