• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

புஷ்பா பொண்டாட்டியின் அதிரடி ஆட்டமும் சம்பள உயர்வும்

கன்னட நடிகையாக இருந்தாலும் தெலுங்கு சினிமா தான் அந்த நடிகையை திரை உலகில் அறிமுகம் செய்து வைத்தது. அவர் அறிமுகமான முதல் படத்திலேயே நடிகைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தெலுங்கு ரசிகர்கள் அந்த நடிகைக்கு தொடர்ந்து வரவேற்பு அளித்ததால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கினார் அந்த இளம் நடிகை.

சமூக வலைத்தளத்தில் அதிக ஆக்டிவாக இருக்கும் அந்த நடிகை அவ்வபோது விதவிதமாக கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களிடம் சூட்டைக் கிளப்பிக் கொண்டிருந்தார். அதனால் அவரை ரசிகர்கள் எக்ஸ்பிரஷன் குயின் என்றே அழைக்க தொடங்கினார்கள்.

மேலும் சோசியல் மீடியா காரணமாக தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நடிகைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் சமீபத்தில் நடிகை நடித்துள்ள புஷ்பா ஐந்து மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றதுஇதன் காரணமாக தற்போது நடிகையின் மார்க்கெட் எகிறி விட்டது. அனைத்து மொழிகளில் இருந்தும் நடிகையை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகிறார்களாம்.

ஆனால் நடிகையோ முன்னதாக ஒப்பந்தமான படங்களைவிட புதிதாக தேடி வரும் படங்களுக்கு அதிக சம்பளம் கேட்கிறாராம். காரணம் கேட்டால் நான் இப்போது பெரிய நடிகையாகி விட்டேன். ஐந்து மொழிகளிலும் என்னை தெரியும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டேன் என கூறுகிறாராம்.

என்னதான் பிரபலமானாலும் அதற்காக இப்படியா? ஒரு படம் தானே ஹிட்டாகி உள்ளது அதற்குள்ளாகவே இவ்வளவு அலப்பறை தேவையா என்பதுபோல் பலரும் நடிகையை விமர்சனம் செய்து வருகிறார்கள். ஒரு படம் ஹிட்டானால் உடனே சம்பளத்தை உயர்த்துவது என்ன மாதிரி டெக்னிக் என்று தெரியவில்லை. ஆனால் வெற்றி என்பது ஒருபோதும் நிரந்தரம் இல்லை என்பது மட்டும் உண்மை.