• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு – 3 பேர் உயிரிழப்பு

பஞ்சாபில் கீழமை நீதிமன்றத்தில் குண்டு வெடித்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் இன்று 3வது தளத்தில் இருந்த கழிவறையில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

பஞ்சாப்பில் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.