• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் மருத்துவமனையில் அனுமதி..

Byகாயத்ரி

Jul 21, 2022

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பகவந்த் சிங் மான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் முதலமைச்சர் கடும் வயிற்று வலியால் அவதிப்படுவதாகவும், இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு மருத்துவர்கள் தீவிர பரிசோதனை செய்த பின்னர் சிகிச்சை அளித்து வருவதாகவும் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவரை முழுமையாக உரையாடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.