• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புதுவை கலவர பூமியாக மாறியுள்ளது-நாராயணசாமி குற்றச்சாட்டு

ByA.Tamilselvan

Oct 3, 2022

புதுவை கலவர பூமியாக மாறியுள்ளது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது…… மின் ஊழியர்கள் போராட்டத்தாலும், அதன் விளைவுகளாலும் புதுவை கலவர பூமியாக மாறியுள்ளது. 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தனியார் வசம் செல்லும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்காது. அரசு அலுவலகங்கள் மற்றும் தெரு விளக்குகளுக்கு அரசு மின் கட்டணம் செலுத்துவதில்லை இதற்கு பாக்கி 800 கோடி நிலுவையில் உள்ளது. இவற்றை எல்லாம் தனியார் மயமானால் செலுத்த வேண்டியிருக்கும். புதுவையில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுவையின் சிறப்பு சி.எம். கவர்னர் தான் என்பது நிரூபணமாகி உள்ளது
மின்துறையை தனியார்மயமாக்க ரங்கசாமிக்கு விருப்பம் உள்ளதா என்பதை அவர் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். மகா அலங்கோலமான ஒரு ஆட்சி புதுவையில் நடக்கிறது. இந்த ஆட்சி குறை பிரசவத்தில் முடியும் என்பதுதான் எனது கணிப்பு. மக்கள் இதனை தூக்கி எரிவார்கள். முரண்பாடான கொள்கைகள் கொண்ட 2 கட்சிகள் கூட்டணியாக ஆட்சிய செய்கின்றனர். இதனால் தான் வளர்ச்சி இல்லை. புதிய கல்வி கொள்கையை மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் எதிர்க்கும். இவ்வாறு அவர் கூறினார்.