• Wed. Dec 11th, 2024

முத்தமிட்டவரை கடித்து வைத்த பாம்பு..!!

Byகாயத்ரி

Oct 3, 2022

கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் தான் காப்பாற்றிய நாகப்பாம்பை முத்தமிட முயன்றபோது, பாம்பு அவரது உதட்டில் கடிக்கும் ஒரு பயங்கரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் உள்ள பொம்மனகட்டே என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பாம்பு கடித்த அந்த நபருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் அந்த வீடியோவில், பாம்பு அவரது கைகளில் இருந்து நழுவி கீழே விழுவதும், பின்னர் மற்றவர்கள் அதைப் பிடிக்க முயற்சிப்பதும் பதிவாகியுள்ளது.