• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விதிமுறைகள் வெளியீடு

ByKalamegam Viswanathan

Jan 13, 2025

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விதிமுறைகள் வெளியீட்டு, டோக்கன் வரிசைஎண் படியே காளைகள் அவிழ்க்கப்படும் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

டோக்கன் வரிசை எண் வாரியாக நேர ஒதுக்கீட்டு அறிவிப்பை மாநகர காவல் துறை வெளியிட்டது.

14.1.2025 பொங்கல் அன்று மதுரை மாநகர அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள காளைகளை அழைத்து வரும் அதன் உரிமையாளருடன் ஒரு நபரும் சரியாக காலை 05.00 மணிக்கு திருப்பரங்குன்றம் ரோடு முல்லை நகரில் உள்ள அனுமதிக்கப்படும் இடத்தில் தங்களது காளைகளை வரிசைப்படுத்தி முறையாக கொண்டு வர வேண்டும்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 1100 காளைகள் அவிழ்த்து விடப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதன் பேரில் 1 முதல் 100 வரையிலான டோக்கன் பெற்றவர்கள் காலை 05.00 மணி முதல் 06:00 மணிக்குள் அனுமதிக்கப்படுவர்.

101 முதல் 200 வரை டோக்கன் உள்ளவர்கள் காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரையிலும்,

201 முதல் 300 வரையிலான டோக்கன் பெற்றவர்கள் காலை 07.00 முதல் 08.00 மணி வரையிலும்,

301 முதல் 400 வரையிலான டோக்கன் பெற்றவர்கள் தங்களது காளைகளை 08.00 மணி முதல் 09.00 மணி வரையிலும்,

401 முதல் 500 வரையிலான டோக்கன் பெற்றவர்கள் தங்களது காளைகளை 09.00 மணி முதல் 10.00 மணி வரையிலும்,

501 முதல் 600 வரையிலான டோக்கன் பெற்றவர்கள் தங்களது காளைகளை 10.00 மணி முதல் 11.00 மணி வரையிலும்,

601 முதல் 700 வரையிலான டோக்கன் பெற்றவர்கள் தங்களது காளைகளை 11.00 மணிமுதல் 12.00 மணி வரையிலும்,

701 முதல் 800 வரையிலான டோக்கன் பெற்றவர்கள் தங்களது காளைகளை மதியம் 12.00 மணி முதல் 01.00 மணி வரையிலும்,

801 முதல் 900 வரையிலான டோக்கன் பெற்றவர்கள் தங்களது காளைகளை மதியம் 01.00 மணி முதல் 02.00 மணி வரையிலும்,

901 முதல் 1000 வரையிலான டோக்கன் பெற்றவர்கள் தங்களது காளைகளை 02.00 மணி முதல் 03.00 மணிவரையிலும்,

1001 முதல் 1100 வரையிலான டோக்கன் பெற்றவர்கள் தங்களது காளைகளை 03.00 மணி முதல் 04.00 மணி வரையிலும் அனுமதிக்கப்படுவர்.

அனுமதிக்கப்படும் நேரத்திற்கு முன்பாக வரக்கூடிய காளைகளை ஆங்காங்கே கட்டி வைத்து பராமரிக்கப்பட வேண்டும். தங்களுக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே காளைகள் அனுமதிக்கப்படும்.

மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தங்களது காளைகளை திருப்பரங்குன்றம் ரோடு வழியாகவும் வெள்ளைக்கல் வழியாகவும் காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் முத்துப்பட்டி சந்திப்பு வரை அனுமதிக்கப்படும் காளைகளை இறக்கிவிட்ட பிறகு காவல்துறை வாகனங்கள் நிறுத்துவதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தங்களது காளைகளை கொண்டு வருபவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட அனுமதி டோக்கன்கள் மற்றும் காளை உரிமையாளர்களின் ஆதார் அடையாள அட்டையை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அதை காவல்துறை மற்றும் கால்நடைதுறையும் இணைந்து QR Code மூலம் ஆய்வு செய்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.

போலியான டோக்கன்களை பயன்படுத்தி நுழைய முற்படும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காளையுடன் வரக்கூடிய 2 நபர்களும் மது அருந்தி வரக்கூடாது மது அருந்தி வருபவர்கள் எக்காரணம் கொண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வெளியூரிலிருந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வரக்கூடியவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து காளைகளை வரிசைப்படுத்தி நிறுத்த வேண்டும். அதுவரை தாங்கள் அழைத்து வரும் காளைகளை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் ஓரமாக கட்டி வைத்து பாதுகாக்க வேண்டும்.

வாடிவாசல் வழியே முறையாக அவிழ்த்து விடப்படும் காளைகளை செம்பூரணி ரோடு தண்ணீர் தொட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள காளைகளை பிடிப்பதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்து (Bull Collection Point) தங்களது காளைகளை பாதுகாப்பாக எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாவண்ணம் பிடித்து செல்ல வேண்டும். மேலும் பொதுமக்கள் யாரும் எவ்விதமான அசட்டையான செயல்களிலும் ஈடுபடக்கூடாது.