• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு..,

ByK Kaliraj

Jun 11, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையில் ஐந்து ஷர்ட்டர்கள் உள்ளது. தற்போது அணையில் நீர்மட்டம் 17 அடியாக உள்ளது.

அணையில் உள்ள ஷர்ட்டர்கள் முழுமையாக இயங்குகிறதா என வருடத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவ மழை பெய்யும் சமயத்தில் ஆய்வு செய்யப்படும். தற்போது தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துள்ளதால் அணைக்கு தண்ணீர் விரைவில் வரத் தொடங்கும். ஆகையால் அணையில் உள்ள ஷர்ட்டர்கள் முழுமையாக இயங்குகிறதா என வைப்பாறு வடிநில உதவி பொறியாளர் கண்ணன் தலைமையில் ஐந்து ஷர்ட்டர்களும் முழுமையாக ஏற்றி, இறக்கி, சரி பார்க்கும் பணிநடைபெற்றது.

பருவ மழை பெய்து அணையில் தண்ணீர் நிரம்பினால் அணையின் பாதுகாப்பு கருதி ஷர்ட்டர்களை திறப்பதில் எவ்வித சிரமமும் இன்றி பராமரிக்கப்பட்டு வருவதாக செய்தியாளர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.