• Sun. May 12th, 2024

உசிலம்பட்டி ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

ByP.Thangapandi

Feb 11, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தொட்டப்பநாயக்கணூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட ஜக்கம்மாள் கோவிலை புரணமைப்பு செய்து சுமார் 495 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் நேற்று மாலை விநாயகர் பூஜை கணபதி ஹோமம் வாஸ்து ஹோமம் , மற்றும் யாகசாலை பிரவேசம் என பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

இன்று காலை கலைக்கோட்டு மகரிஷி ஆயக்கட்டு மந்திரங்களுடன் நாடி சந்தனம், கடம் புறப்பாடு நடைபெற்றது., முன்னதாக யாக சாலையில் முன்பு ஜமீன்தார் பாண்டியர் மற்றும் பாலமுருகன் மகாராஜா அவர்களுக்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பின்னர் ஜக்கம்மாள் சுவாமிக்கு கருவறையில் பல்வேறு பூஜைகள் நடைபெற்ற தீபாராதனை நடைபெற்று ஸ்ரீலஸ்ரீ கணேஷ் சுவாமிகள் பொதுமக்களுக்கு புனித நீர் தெளித்தனர்.

இதில் தொட்டப்பநாயக்கணூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *