நீலகிரி மாவட்டம் குன்னூர் அரூகே உள்ள தூதூர்மட்டம் பகுதியில் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் சார்பாக கட்டப்பட்ட பொதுக்கழிப்பறை பணிகள் முடிந்து ஆறு மாதம் ஆகியும் திறக்கப்படாமல் கிடக்கும் அவல நிலை …
குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் பகுதியில் பேருந்து நிலையம் அருகே இருந்த பழைய கழிப்பிடத்தை இடித்துவிட்டு குன்னூர் ஊராட்சி ஒன்றியம் சார்பாக ரூபாய் 3.50 லட்சம் மதிப்பில் புதிய கழிப்பிடம் கட்டப்பட்டது கட்டப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் கழிப்பிடம் திறக்கப்படாததால் பேருந்துக்காக வரும் பயணிகள் திறந்தவெளியில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்ட பொழுது ஊராட்சி ஒன்றியம் சார்பாக கழிப்பிடம் கட்ட கொடுக்க வேண்டிய தொகை கொடுக்கவில்லை என்றும் அதனால் திறக்கப்படாமல் கிடப்பதாகவும் தெரிவித்தார் இதேபோல் ஊராட்சி ஒன்றியம் சார்பாக வளர்ச்சி பணிகள் பல இடங்களில் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான பில் தொகையை ஊராட்சி ஒன்றியம் வழங்க தாமதப்படுத்துவதாகவும் ஒப்பந்ததாரர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று கேட்டால் மெத்தனப்போக்கில் நடந்து கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர் எனவே புதிதாக கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாத கழிப்பிடத்தைதிறக்க மாவட்ட நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.