• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்..,

ByKalamegam Viswanathan

Jun 19, 2026

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 29 வது வார்டு பாலம் ஸ்டேஷன் ரோடு கபடி சிலை அருகே முப்பதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்கள் மற்றும் கை குழந்தைகளுடன் செல்லூர் பாலம் இறக்கத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் திடீர் சாலை மறியர்களால் காலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

இது குறித்து மறியல் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில் எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை வழிந்து ஓடுகிறது எனவும் மேலும் குடிநீர் முறைப்படி வழங்கவில்லை எனவும் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாகவும் பலமுறை கவுன்சிலரிடமும் மற்றும் மாநகராட்சி அதிகாரியிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

எனினும் சம்பவ இடத்துக்கு விரைந்த செல்லூர் போலீசார் சாலை மறியல் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்களை சாலையில் ஓரமாக நின்று பேசுவோம் என சாலை மறியல் கைவிட செய்தனர். இதனால் செல்லூர் பகுதியில் சுமார் 15 நிமிடம் நிற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.