• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பல்லடம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்!!

ByS.Navinsanjai

Apr 22, 2024

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நாசுவம்பாளையம் பகுதியில் மின் இணைப்பு கொடுக்க பணம் கட்டியும் 5 மாதமாகியும் இன்றுவரை இணைப்பு கொடுக்கவில்லை என்றும், 40க்கும் மேற்பட்டோர் 15 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தியும் இதுவரை பொருட்படுத்திக் கொள்ளாமல் தங்களை அவமதிப்பதாக புகார் தெரிவித்து தற்போது முற்றுகையிட்டுள்ளர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 15 ஆண்டுகளாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு இப்பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நபர் ஒருவருக்கு 8000 என்றும், அதுபோக மின் உபகரணங்கள் இல்லாததால் அதற்கும் பணம் செலுத்த வேண்டும் என்றும், சுமார் மொத்தம் நபர் ஒருவருக்கு 15,000 வரை பெற்றுக் கொண்டதாகவும் ஆனால் இதுவரை தங்களிடம் போதிய அளவு மீட்டர் இல்லை என்று அலுவலர்கள் தெரிவித்து தங்களை மிகுந்த வேதனைப்படுத்துவதாகவும் பள்ளி குழந்தைகள் படிப்பதற்கு கூட மின்சார இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும் இரவு நேரங்களில் குடியிருக்க முடியாமல் அச்சப்படும் நிலை தற்போது உள்ளதாக கூறி இப்பகுதியை சேர்ந்த பெண்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு மாத காலததிற்குள் சரிசெய்து தருவதாக கூறியதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.