சென்னை வேங்கை வாசல் ஊராட்சி மன்றத்தில். சென்னை தெற்கு மாவட்டம் புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக சார்பில்,நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தை. வேங்கைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் வி ஜெயச்சந்திரன் தலைமையில், சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் முன்னிலையில், இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டமும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு சீரும் சிறப்புமாக பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் புனித தோமையர் மலை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜி. வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றி தலைமைக் கழக பேச்சாளர்கள் வேலூர் ரமேஷ். சைதை சாதிக். மிகச் சிறப்பாக நான்காவது சாதனைகளில் தமிழக முதல்வர் செய்த சாதனைகளை வெகு சிறப்பாக எடுத்துரைத்தார்கள். இதில் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சப்பிரமணியம் இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அந்த நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ். சிறப்புரையாற்றி ஆயிரத்து 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி உரையாற்றினார். இதில் கட்சி நிர்வாகிகள், கழகத் தோழர்கள், மகளிர் அமைப்புகள், பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு இந்த நலத்திட்ட உதவிகள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.