கரூர் மாநகராட்சி அருகே அமைந்துள்ள ஆசாத் சாலையில் சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, காவல் நிலையம், வணிக நிறுவனங்கள் மற்றும் பள்ளி செயல்பட்டு வருகிறது.
நாள் ஒன்றுக்கு ஏராளமான வாகனங்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வரும் நிலையில் அடிக்கடி கழிவுநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் செல்வதாக பலமுறை அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் அருகே கழிவுநீர் வடிகால் அடைப்பு ஏற்பட்டு அதிகப்படியான கழிவு நீர் சாலையில் செல்வதால் பள்ளி மாணவர்கள் அதனை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)