• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சுற்றுச்சுவர் சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

ByKalamegam Viswanathan

Oct 13, 2024

விக்கிரமங்கலம் அரசு மருத்துவமனையில் இடிந்த நிலையில் சுற்றுச்சுவர் சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் பாதுகாப்பில்லாத நிலையில் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். இந்த மருத்துவமனைக்கு விக்கிரமங்கலம் கோவில்பட்டி, நரியம்பட்டி, மேல பெருமாள்பட்டி, கல் புளிச்சான்பட்டி, கொசவபட்டி, வடகாடுப்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து தினசரி அதிக அளவில் பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையின் சுற்று சுவர் இடிந்து பல மதங்களாகியும், சீரமைக்காததால் பாதுகாப்பற்ற நிலையில் மருத்துவமனை வளாகம் இருப்பதாகவும், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாகவும், இதன் காரணமாக மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவும், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால் விக்கிரமங்கலம் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைத்து மருத்துவமனைக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.