• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அரசு மருத்துவமனையில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை…

ByKalamegam Viswanathan

Sep 7, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து கொண்டே வரும் சூழ்நிலையில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினசரி காலையில் 1000க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் நோயாளிகள் சீட்டு பதிந்து, அதன் பின்பு மருத்துவரை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் போதிய பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் பதிவு செய்யும் இடத்தில் தினசரி கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் பெண்கள் மற்றும் வயதானவர்கள் நிற்க முடியாமல் மருத்துவமனை படிக்கட்டுகளில் அமர்ந்து ஓய்வெடுக்க வேண்டிய அவல நிலையும் உள்ளது. ஆகையால் நோயாளிகள் மற்றும் வயதானவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு சீட்டு பதியும் இடத்தில் கூடுதல் பணியாளர்களை நியமித்து நோயாளிகள் சிரமப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.