திருப்பூர் மாவட்டம் பல்லடம் என் ஜிஆர் சாலையில் வாரச்சந்தையானது திங்கட்கிழமையில் செயல்பட்டு வருகிறது.

நான் இருக்கும் மேற்பட்ட வார சந்தை கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் நகராட்சி அதிகாரிகள் வாரச்சந்தை செயல்படும் இடத்தில் தாட்கோ கடைகளை கட்ட அளவீடு பணிகள் செய்த நிலையில் தாட்கோ கடைகள் கட்டும் இடமானது வாரச்சந்தை வளாகத்திற்குள் செல்ல முடியாத நிலையில் அளவீடு பணிகள் செய்யப்பட்டிருப்பதாக கூறி பாலச்சந்தியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் 500க்கும் மேற்பட்டோர் பல்லடம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் போலீசார் தற்பொழுது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் நகராட்சி ஆணையாளரை சந்தித்து இதுகுறித்து முறையிட போவதாகவும் தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தில் இருந்து கலைய மாட்டோம் என வியாபாரிகள் தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.








