திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முறையாக செயல்படுவதில்லை எனவும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை எனவும் கூறி அப்பகுதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இருப்பினும் நடவடிக்கை எடுக்கததால் அப்பகுதியில் இன்று கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அதிகாரிகள் வருவதில்லை என்று பட்டா,உதவித்தொகை உள்ளிட்டவைகளுக்கு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை என்றும் தற்போது பணியாற்றும் அதிகாரிகளை மாற்றி புதிய அதிகாரிகளை பணியமர்த்த வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் சம்பவயிடம் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.







; ?>)
; ?>)
; ?>)