• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

கையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்..,

ByR. Vijay

Jul 29, 2025

நாகை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் கையில் தீப்பந்தம் ஏந்தி மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். நாகை வட்ட தலைவர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் உதயகுமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், முன்னாள் தலைமை அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். உயர்நீதி மன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். உயிரிழந்தவர்களின் குடுபத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத பணியாளர்களுக்கு ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைக்க வேண்டும். தனியார்மயமாக்குதலை கைவிட வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளை தமிழக அரசே பராமரித்திட வேண்டும். கிராம புற இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கோஷங்களை எழுப்பினர். மாவட்ட பொருளாளர் பாலமுரளி நன்றி கூறினார்.

நெடுஞ்சாலை பணியாளர்கள் தீபந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.