மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையை நிறைவு செய்து பள்ளிவாசல் முன்பு இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த புதிய மசோதாவில் வக்ஃப் வாரியங்களில் மகளிர் மற்றும் பிற மதங்களை சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக நியமிக்க வழிவகை திருத்தம் செய்வது போன்ற இன்னும் சில சட்ட திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது. இந்த திருத்தங்கள் இந்திய அரசியல் அமைப்பு அடிப்படைக்கு எதிரானது எனவும், மேலும் இந்திய மக்களிடையே மத பிரிவினையை ஏற்படுத்தும் உள்நோக்கம் தோடு மத்திய அரசு இந்த சட்ட திருத்தத்தை செய்துள்ளதாக இஸ்லாமியர் குற்றம் சுமத்தி சிவகங்கை பெரிய பள்ளிவாசல் வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசல் முன்பு வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நிறைவு செய்த பின்னர் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜமாஅத் தலைவர் காஜா முகைதீன் தலைமையில் நடைபெற்றது. பள்ளிவாசல் தலைமை இமாம் முஹம்மது பிலால் தாவூதி கண்டன உரை நிகழ்த்தினார் ஆர்ப்பாட்டத்தில் ஜமாஅத்தார்கள், எஸ்டிபிஐ மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர். சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.
