புதுவையில் போலி மருந்து தொழிற்சாலையை கண்டித்து காரைக்காலில் போராளிகள் குழு சார்பில் 400க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.


புதுச்சேரியில் கோடிக்கணக்கான போலி மருந்துகள் பிடிபட்ட சம்பவம் மாநில முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் போலி மருந்து தொழிற்சாலையை கண்டித்தும் இது தொடர்பாக புதுச்சேரி அரசு விசாரணை நடத்த வலியுறுத்தியும் இன்று காரைக்கால் மாவட்டத்தில் போராளிகள் குழு சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் கணேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது 400க்கும் மேற்பட்ட போராளிகள் குழுவை சேர்ந்தவர்கள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கண்டன பேரணியில் ஈடுபட்டனர். முன்னதாக கண்டன பேரணியில் புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலைகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் போராளிகள் குழுவின் அட்மின்கள் விடுதலைக்கனல் அப்துல் ரஹீம் பிரபாகர் வீரராஜன் கருணாநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் காரைக்கால் போராளிகள் குழுவின் வழிகாட்டுதல் குழு தலைவர் சாமிநாதன் கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தில் முடித்து வைத்தார்.




