தமிழக முழுவதும் ஊராட்சிகளில் வேலை செய்து வரும் 12,524 OHT டேங்க் ஆப்ரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்களை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்கிட வலியுறுத்திCITU சார்பாக
மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரே உள்ள PLA ரவுண்டானா அருகே நடைபெற்ற ப ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள oht ஆப்ரேட்டர்கள் கலந்து கொண்டனர். citu மாவட்டத் தலைவர்
N.ராஜா தலைமையில்.ரெங்கசாமி முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு அரசு உள்ளாட்சித்துறைகுறைந்தபட்ச கூலி சட்டம் அரசாணை 2(g) எண் 62-ன் படி சங்கம் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் OHT ஆப்ரேட்டர்களுக்கு மாதம் ஊதியம் ரூ.14,593/-. துப்புரவு பணியாளர், தூய்மை காவலர்களுக்கு மாதம் ஊதியம் ரூ.12,593/- வழங்குக!
ஊராட்சியில் பணிபுரியும் OHT ஆப்ரேட்டர்களுக்கு, தூய்மை காவலர்களுக்கு ஓய்வூதியம், சர்வீஸ் தொகை சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் தூய்மைபணியாளர்Nகளுக்கு 7-வது ஊதியக்குழு ஊதியம் வழங்குவதுடன் நிலுவைத்தொகை அரியராக வழங்க வேண்டிய 10-5-2000-க்கு பின் புதிய நியமனம் செய்யக்கூடாது என பிறப்பித்த தடை ஆனை உத்தரவு கடந்த 24 வருடங்களாக அமலில் உள்ளதை ரத்துசெய்க, பல்லாயிரக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டியும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.