மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில் ஆங்கிலேயர் ஆட்சியில் வழங்கிய அரசு கள்ளர் சீரமைப்பு துறையின் மூலம் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் சமையல் செய்வதை( உணவு வழங்குவதை ) தனியாருக்கு தாரைவார்க்கும் அரசு ஆணையை ரத்து செய்யக்கோரியும், சீர்குலைக்கும் திமுக அரசை கண்டித்தும் தமிழ் மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையின் மாநிலத் தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.,

இதில் இணைச்செயலாளர் சௌந்தரபாண்டியன், மாநில அமைப்புச் செயலாளர் கணேசன், சேடப்பட்டி ஒன்றியம் தெய்வம், மாணவரணி தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.,







