• Tue. Mar 19th, 2024

போராட்டம் வேறு.. கலவரம் வேறு.. ஈரான் அதிபர்

ByA.Tamilselvan

Sep 29, 2022

ஈரானில் ஹிஜாப்பை சரியாக அணியவில்லைஎன்று கூறி இளம்பெண் மாஷா அமினி கொல்லப்பட்டார்.இதற்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு அந்நாட்டின் அதிபர் கண்டம் தெரிவித்துள்ளார்.
ஈரானில் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று கூறி போலீசாரால் தாக்கப்பட்ட இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்தார். இதனால் ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகிறது. ஹிஜாப்பை எரித்தும், தலைமுடியை வெட்டியும் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 76 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தநிலையில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஒரு தொலைக்காட்சி பேட்டியில் – மாஷா அமினியின் மரணம் துயரமானது. ஆனால் வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். மக்கள் பாதுகாப்பு என்பது ஈரான் அரசின் சிவப்பு கோடு ஆகும். அதை மீறி குழப்பம் விளைவிக்க யாருக்கும் அனுமதி இல்லை. எதிரி (அமெரிக்கா) தேசிய ஒற்றுமையை இலக்காக கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *