நீலகிரி மாவட்டம் கூடலூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வர தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் கூடலூர் நெலாகோட்டை பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று வீடுகளையும் வாகனங்களையும் சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தற்போது சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து வனவிலங்குகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பலமுறை பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருவதாகவும் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.