ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் வீட்டுமனை பட்டா வழங்க கோரி வன வேங்கை கட்சி சார்பாக சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஆனால் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையை கண்டித்து வன வேங்கைகள் கட்சி மதுரை மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் குறிஞ்சி சேகர் மாநில கொள்கை பரப்பு செயலாளர் முத்து மாநகர் மாவட்ட செயலாளர் அறிவழகன் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் செல்வம் தொழிலாளர் முன்னணி அமைப்பாளர் உட்பட ஆதிதிராவிட மக்கள் மற்றும் வன வேங்கைகள் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.