காரைக்கால் மாவட்டம் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்பவர்களுக்கு தற்போது 125 நாட்கள் ஆக உயர்த்தி உள்ளனர். இதனை உறுதி செய்து 125 நாட்களும் வேலை வழங்க வேண்டும் என்றும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாவட்ட கடைமடை விவசாயிகள் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.





