தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமகவுண்டன்பட்டி சங்கிலி கருப்பன் மலையில், பல ஆண்டுகளாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கி வந்த கல் உடைக்கும் உரிமத்தை, தனிநபர்களுக்கு தந்துள்ளனர்.

இந்த உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் சங்கிலி தலைமையில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்குவாரி மலைமீது ஏறி போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தின் போது மகளிர் குழுக்களுக்கு வழங்கிய உரிமத்தை, தற்போது அரசு டெண்டர் மூலம் தனி நபர்களுக்கு வழங்கி உள்ளது. இங்கு உடைக்கும் பல நூறு டன் கல்கள் அனைத்தும் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதாகவும், எனவே தனிநபருக்கு வழங்கிய கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய கூறி கோஷங்கள் எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளர் கூறுகையில், பல ஆண்டுகளாக இக்குவாரியின் உரிமத்தை இப்பகுதிய சேர்ந்த மக்கள் தான் மகளிர் சுய உதவிக் குழு மூலமாக அரசுக்கு உரிய வரியை செலுத்தி கல் உடைக்கும் உரிமம் எடுத்துள்ளனர், தற்போது இப்பகுதி மக்களுக்கு தராமல், கல்குவாரி உரிமம் வேறு பகுதியை சேர்ந்த தனி நபர்களுக்கு தந்துள்ளதாகவும், இதனை உடனே ரத்து செய்து, இப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு கல்குவாரி உரிமையை கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
அதேபோல் கேரளாவிற்கு கனிம வளங்களை கொண்டு செல்வதை தடுக்க வேண்டும், இல்லை என்றால் அடுத்த கட்டமாக இப்பகுதி மக்களுடன் இந்த குவாரி மலையில் குடியேறும் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)