காரைக்கால் மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பிரிவுகளில் மருத்துவர்கள் இல்லை கட்டிடங்கள் பாதுகாப்பானதாக இல்லை ஆம்புலன்ஸ் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இல்லை.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனை முதலுதவி மையமாகவும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆள் அனுப்பும் நிலையமாகவும் செயல்பட்டு வருகிறது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து காரைக்கால் போராளிகள் குழு சார்பில் காயகட்டுடன் காரைக்கால் காத்தா பிள்ளை கோடி சந்திப்பில் இருந்து பேரணியாக சென்று மருத்துவமனையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக மருத்துவமனை வாயிலில் கட்டுகளுடன் புதுச்சேரி அரசு நடவடித்துறை மற்றும் காரைக்கால் பொது மருத்துவமனையை கண்டித்து கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து மருத்துவமனை கேட்டை நோக்கி நடந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்கால் போராளிகள் குழுவின் தலைவர் வழக்கறிஞர் கணேஷ் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட காரைக்கால் போராளிகள் குழுவினர் கலந்து கொண்டனர்.
அரசு பொது மருத்துவமனையை முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் மருத்துவமனைக்கு முன்பே தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.