• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நிலத்தின் எல்லைக்கல்லை பிடுங்கி மாற்றிவிட்டதாகஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா.

Byமுகமதி

Jan 21, 2026

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள மட்டையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். பட்டியல் இனத்தை சேர்ந்த இவர் அப்பகுதியில் அரசு வழங்கிய நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார்.

இவரைப் போலவே அடுத்தடுத்து அரசு வழங்கிய நிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மற்றவர்களும் குடியிருந்து வருகிறார்கள். அந்த இடத்தின் அளவு 8 ஏக்கர் அளவாகும். அரசு வழங்கிய இந்த நிலத்தைச் சுற்றிலும் பட்டா நிலங்கள் மற்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் ரவிச்சந்திரன் என்பவரது இடமும் இருக்கிறது. அவர் தன்னுடைய நிலத்துடன் சேர்த்து அரசு ஆதிதிராவிட பட்டியலின மக்களுக்கு வழங்கிய நிலத்திலும் சுமார் 5 மீட்டர் அளவுக்கு ஆக்கிரமித்து விட்டதாகவும் இது குறித்து காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து வருவாய் துறையினரிடம் புகார் கொடுத்தும் அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் தர்ணா போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.

அவர்களை ஒருங்கிணைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சேர்ந்த சிறுத்தை சிவா என்பவர் தலைமையில் வருவாய்த்துறையினரிடமும் காவல்துறையினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தை முழுமை பெறாததால் இந்த தர்மா போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.