புதுச்சேரி உழவர் கரை நகராட்சி மற்றும் மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பட்டியலின சலவை தொழிலாளர்களுக்கு சிறப்புக்கூறு நிதியில் வில்லியனூர் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் சலவைகூடம் ( சலவைத் துறை) கட்ட அரசு ஆணையிட்டும் அதனை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை.
மேலும் சலவை கூடம் கட்ட பல ஆண்டுகளாக வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் மெத்தன போக்குடன் செயல்படும் வில்லியனூர் கொம்மியூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் உதவி பொறியாளரை கண்டித்து இன்று புதிரை வண்ணார் விடுதலை இயக்கம் சார்பில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் எதிரே துணி துவைக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது.
இப்ப போராட்டத்திற்கு புதிரை வண்ணார் விடுதலை இயக்கத்தின் தலைவர் தெய்வநீதி தலைமை தாங்க பொதுச்செயலாளர் அர்ஜுனன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூட்டை மூட்டையாக துணியை சாலைகள் போட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.