புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (வடக்கு) சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றி ஒன்றிய அரசின் நிதியைக் குறைத்த ஒன்றிய பா ஜ க அரசைக் கண்டித்தும் பழைய நிலையிலேயே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை அமல்படுத்த வலியுறுத்தி புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகரன் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெனட் அந்தோணி ராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் துரை திவியநாதன், செயற்குழு உறுப்பினர் தனபதி, வட்டாரத் தலைவர் சூர்யா பழனியப்பன், மாநகரத் தலைவர்கள் மதன் கண்ணன், பாருக் ஜெய்லானி, மாமன்ற உறுப்பினர் ராஜா முகமது, திருக்கட்டளை ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலையில் கண்டன தர்ணா போராட்டம் வாயில் கருப்புத் துணி கட்டியும் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் நடைபெற்றது.

இதில் மாவட்டத் துணை தலைவர் வேங்கை அருணாசலம், ஒன்றியக் கவுன்சிலர் துரைகண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ராஜகோபால், மாவட்ட கலைப் பிரிவுத் தலைவர் மேப் வீரையா, சிறுபான்மை பிரிவு தலைவர் குட்லக் அப்துல்லா, ஓபிசி அணித் தலைவர் ஆனந்தன் பொதுச்செயலாளர் எஸ் பி. ஆறுமுகம், மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் தினேஷ் குமார், எம் ஏ கே. சேட்டு, எஸ் ஆர் வீ. ராஜசேகரன் எஸ். தங்கராஜ் .மணி. மாவட்ட மகளிர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள்( வடக்கு) கவுரி. (தெற்கு) சிவந்தி நடராஜன், நகர துணைத் தலைவர்கள் நாச்சிமுத்து நமசிவாயம் சகாய ராஜ் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.







