திண்டுக்கல் மாவட்ட டாஸ்மார்க் அலுவலகம் முன்பு சிஐடியு திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் மகாமுனி தலைமையில் நடைபெற்றது.

மாநில சம்மேளன குழு உறுப்பினர் கோபால் சிறப்புரை ஆற்றினார். காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தால் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமை பாதிப்புகளை கருத்தில் கொண்டு மாற்று திட்டத்தை உருவாக்க வேண்டும்.
டாஸ்மாக் கடைகளில் 22 ஆண்டுகள் பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு நீதிமன்ற வழங்கிய நிரந்தர பணி தீர்ப்பு உத்தரவை அரசு மேல்முறையீடு செய்யாமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும. 50 ஆயிரம் கோடி வருமானத்தை அள்ளித்தரும் டாஸ்மாக் ஊழியருக்கு 40 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இ எஸ் ஐ மருத்துவ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில துணை செயலாளர் சீனிவாசன், மாநில குழு உறுப்பினர் ராமு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.