108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக இன்று தேனி பங்களாமேடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு கடந்த நான்கு வருடங்களாக முறையாக ஊதிய உயர்வை வழங்கவில்லை என்றும் வருடாந்திர ஊதிய உயர்வை 16 சதவீதமாக தமிழக அரசு வழங்கிய நிலையில் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஊழியர்களுக்கு 10% மட்டும் ஊதிய உயர்வு வழங்கியதாக குற்றச்சாட்டு தெரிவித்து கையில் பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் தொழிலாளர் விரோத செயலை கண்டித்து அதற்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசை கண்டித்தும்,
மேலும் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு 30 சதவீதம் ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.