தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட நரியூத்து மலை கிராமத்தில் கடந்த 80 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த வந்த நரியூத்து- வாய்க்கால்பாறை சாலையை புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த சாலை வனத்துறைக்கு கட்டுப்பட்டதாக கூறி கடந்த 6 மாதங்களாக வனத்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

இதனை கண்டித்து மயிலாடும்பாறை வருசநாடு சாலையின் ஓரத்தில் நரியூத்து மலை கிராம மக்களும், தேனி மாவட்ட பாஜக கட்சியினரும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சாலை புதுப்பிக்கப்படாமல் மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் நாள்தோறும் மலை கிராம மக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாவதாகவும்,இதனை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும்,உடனடியாக சாலை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டதோடு வனத்துறையினரையும் தமிழக அரசையும் கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.

விரைவில் மலை கிராமத்திற்கான சாலை வசதி அமைக்க படாவிட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என பாஜக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.




