• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் திமுக சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ.4034 கோடி வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு முதல் கிராம பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் செயல் பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக மத்திய அரசு ஊதியம் வழங்காமல் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.4034 கோடியை வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்தது.

இதனையடுத்து சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் திமுக சாத்தூர் யூனியன் முன்னாள் சேர்மன் நிர்மலா கடற்கரை ராஜ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.