வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழக வெற்றி கழகம் ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க.வினருக்கும், காவல் துறைக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் எதிரில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு த.வெ.க பிரமுகர் ஆசிப் தலைமை வகித்தார். தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் குட்டி கோபி கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வக்பு வாரிய சட்டத்தை மத்திய அரசு திருத்துவதை கண்டித்தும், இந்தியாவில் மத வேற்றுமையை உருவாக்கும் மத்திய அரசை கண்டித்தும், வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் காவல் துறையினருக்கும், த.வெ.க வினருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் த.வெ.க வினர் சுமார் 200 பேருக்கு மேல் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர்.