• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழ் பெயர் பலகை வைக்கும் போராட்டம்..,

BySeenu

Jun 25, 2025

தமிழ்நாடு வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம், பெங்களூரு இன்டெர்சிட்டி ரயில் பெட்டிகளில் தமிழ் புறக்கணிப்பு செய்யப்படுவதாக குற்றச்சாட்டி கோவையில் தமிழ் பெயர் பலகை வைக்கும் போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஈடுபட்டன.

எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக தமிழ்நாட்டின் 8 ரயில் நிலையங்களை கடந்து பெங்களூருக்கு இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பெட்டிகளில் பெயர் பலகைகள் இந்தி, ஆங்கிலம், கன்னடம்,மலையாள மொழிகளில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் 300 கிலோ மீட்டர் தூரம் 8 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரயிலில் தமிழ் பெயர் பலகை வைக்கப்படவில்லை என கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் திட்டமிட்டு தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் பாஜக அரசு புறக்கணித்து இருக்கிறது என முழக்கங்களை எழுப்பினர். இதை அடுத்து எர்ணாகுளம் பெங்களூரு ரயில் மதியம் 12 மணிக்கு கோவை ரயில் நிலையத்துக்கு வந்த போது ரயில் பெட்டிகளில் தமிழில் பெயர் பலகைகளை வைக்க போராட்டக்காரர்கள் ரயில் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த 20 பேரைக் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.