• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

கோவிலுக்கு மேற்கூரை அமைக்கும் விஷயத்தில் அமைச்சர் மூர்த்தியை கண்டித்து போராட்டம்..,

ByKalamegam Viswanathan

Feb 26, 2026

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதியான பரவை அடுத்த ஊர்மெச்சிகுளம் மந்தை பகுதியில் அமைந்துள்ளது.

சக்தி விநாயகர்கோவில்

இந்த கோவிலுக்கு முன்பகுதியில் மேற்கூரை அமைத்து தர வேண்டும் என திமுகவினர் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியிடம் மனு அளித்தாக கூறப்படுகிறது.

அமைச்சர் மூர்த்தி பரவை பேரூராட்சி அதிகாரிகளிடம் கூறி மேற்கூரை அமைக்க முடிவு செய்த நிலையில் பரவை பேரூராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த கலா மீனாராஜா இருந்து வருகிறார்

இந்த நிலையில் பேரூராட்சி தலைவரை கலந்து கொள்ளாமல் தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலும் அராஜக போக்குடன் மேற்கூரை அமைப்பதற்கான பணிகளை தொடர முகூர்த்தக்கால் மற்றும் பூமி பூஜை பணிகளை இன்று மேற்கொள்ள இருந்தனர்.

இதனிடையே இதற்கு எதிரிப்பு தெரிவித்த அதிமுகவினர் பரவை பேரூராட்சி தலைவர் கலா மீனா ராஜா, அதிமுக கவுன்சிலர்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவிலுக்கு முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கூரை அமைத்தால் சமூகவிரோத செயல்கள், குடிமகன்கள் தொல்லை அதிகரிக்கும் பெண்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் எனக் கூறி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இதனை ஏற்காத திமுகவினர் அமைச்சரின் தூண்டுதலால் கோவிலுக்கு மேற்கூரை அமைக்க வேண்டும் என கூறி அங்கு திமுகவினர் திரண்டு வந்தனர் இதனால் திமுக மற்றும் அதிமுகவினுடைய மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.

சம்பவம் அறிந்த சமயநல்லூர் டி.எஸ்.பி.ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் அங்கு குவிந்தனர். இரு தரப்பினரிடையே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே போலீசார் சோவிலை பூட்டி அப்பகுதியில் பாது காப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு தரப்பினர் மோதலால் அப்பகுதி ஒரு பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது. மேலும் கோவில் முன்பு எப்படியாவது மேல் கூரை அமைத்து தீருவது என அமைச்சரின் நாட்கள் அங்கு முகாம்கள் இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.