விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள குமாரலிங்காபுரத்தில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடாத சாத்தூர் வட்டாட்சியர் உட்பட ஏழு பேரை விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். அதனைக் கண்டித்து வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (13.2.2025) காலை 10.30 மணியளவில் சாத்தூர் வட்டாட்சியருக்கு வழங்கப்பட்ட தற்காலிக பணி நீக்கம் ஆணையினை திரும்பப் பெறும் பொருட்டும், மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேற்படி போராட்டத்தில் வெம்பக்கோட்டை வட்டத்தில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், நில அளவைப் பிரிவு அலுவலர்கள்,
( 12 ஆண்கள், 10 பெண்கள்) கலந்து கொண்டனர்.