• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரையில் தொழில் முனைவோருக்கான ஊக்குவிப்பு கருத்தரங்கம்..!

ByM.Bala murugan

Nov 24, 2023

மதுரையில் EVOLVE 3.0 என்ற பெயரில் தொழில் முனைவோருக்கான ஊக்குவிப்பு கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது என CII இந்திய தொழில் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள CII அலுவலகத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பில் CII-ன் துணை அமைப்பான Yi அமைப்பினை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சர்மிளா தேவி, விக்ராந்த், பைசல் அகமது ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது..,
நவம்பர் 25ஆம் தேதி மதுரையில் EVOLVE 3.0 என்ற தலைப்பில் தொழில் முனைவோருக்கான ஊக்குவித்தல் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்தக் கருத்தரங்கம் மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள கோர்ட் யார்டு ஹோட்டலில் நவம்பர் 25ஆம் தேதியன்று ஒரு நாள் மட்டும் நடைபெற இருக்கிறது. இதில் 350 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் பங்கு பெற உள்ளனர். மேலும் இந்த கருத்தரங்கத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொழில் முனைவோருக்கான ஊக்குவிப்பு பயிற்சி பட்டறைகள் நடைபெற இருக்கிறது.
இந்த கருத்தரங்கத்தில் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, சேலம் ஆர்.ஆர். பிரியாணி தமிழ்செல்வன் திண்டுக்கல் தலப்பாகட்டி ரெஸ்டாரண்ட்ஸ் சி.இ.ஓ குமார், சௌரப் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டு தொழில் முனைவோருக்கான ஊக்குவிப்பு பயிற்சிகள் வழங்க இருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டது.